About Us

              விசுவாச ஜெப ஊழியம் 2002 அக்டோபர் மாதம் 9 - ஆம் தேதி விசுவாச நண்பர்களால் துவங்கப்பட்டது. அன்று முதற்கொண்டு இந்த நாள் வரை பிரதி மாதம் நான்காம் சனிக்கிழமை ஆசீர்வாத மாலை கூட்டம் நடைபெறுகிறது. இதன் அடிப்படையிலே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி துவங்கப்படவுள்ளது. கர்த்தருடைய சித்தத்தின்படி அதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டது. நோக்கம் : பிறர் மதத்தையோ பிறர் மனதையோ பிறர் வழிபாட்டு முறைகளையோ குற்றம் சொல்லவோ குறை சொல்லவோ அல்ல, கிறிஸ்துவை அறிந்து கொண்ட கிறிஸ்தவர்களுக்கு விசுவாச வாழ்க்கைக்கு ஒரு ஊன்று கோலாக இருக்க, தேவையானவர்களுக்கான சிறு சிறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள விசுவாசத்தோடு அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறது போல நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். ( 2 தீமோத்தேயு 4:7) அப்போஸ்தலனாகிய பவுல் போராட்டத்தின் போது காத்துக்கொண்ட விசுவாசத்தை போல கிறிஸ்த்தவர்கள் தங்கள் அனுதின வாழ்க்கையில் விசுவாசத்தைக் காத்துக்கொள்ள எங்கள் தொலைக்காட்சியின் ஒரு முயற்சி.